Wednesday, 4 May 2011

"மாலை மாற்று!"






''யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா

யாகாயாழீ காயாகா தாயாராரா தாயாயா
யாயாதாரா ராயாதா காயாகாழீ யாகாயா

தாவாமூவா தாசாகா ழீநாதாநீ யாமாமா
மாமாயாநீ தாநாழீ காசாதாவா மூவாதா

நீவாவாயா காயாழீ காவாவானோ வாராமே
மேராவானோ வாவாகா ழீயாகாயா வாவாநீ

யாகாலாமே யாகாழீ யாமேதாவீ தாயாவீ
வீயாதாவீ தாமேயா ழீகாயாமே லாகாயா

மேலேபோகா மேதேழீ காலாலேகா லானாயே
யேனாலாகா லேலாகா ழீதேமேகா பொலேமே

நீயாமாநீ யேயாமா தாவேழீகா நீதானே
நேதாநீகா ழீவேதா மாயாயேநீ மாயாநீ

நேணவரா விழயாசைழியே வேகதளேரிய ளாயுழிகா
காழியுளாய ரிளேதகவே யேழிசையாழவி ராவணனே

காலேமேலே காணீகா ழீகாலேமா லேமேபூ
பூமேலேமா லேகாழீ காணீகாலே மேலேகா

வேரியுமேணவ காழியயே யேனைநிணேமட ளோகரதே
தேரகளோடம ணேநினையே யேயழிகாவண மேயுரிவே

நேரகழாமித யாசழிதா யேனனியேனனி ளாயுழிகா
காழியுளானின யேனினயே தாழிசயா தமிழாகரனே"


மேலே கண்டுள்ளது திருஞான சம்பந்த சுவாமிகள் எழுதிய மாலை மாற்றுப்
பதிகமாம்.

இதன் அமைப்பு முறை, பொருள் தெரிந்தால் கூறுங்களேன்


திருப்பி எழுத்து எழுத்தாகப் படித்தாலும் அதே சொற்கள் வருகின்றன.

விகடகவி என்பதை திருப்பிப்படித்தாலும் விகடகவியே வருவது போல.

நல்ல விளக்கம் அளிப்பவரது பின்னூட்டம் ஒரு பதிவாக நன்றியுடன் வெளியிடப்படும்.


5 comments:

  1. வணக்கம் மாமி . இது மிகப் பெரிய விசயம்,
    பல பக்கங்கள் பிடிக்கும் ..

    ஒரு அரிய செய்தியை வெளியிட்டுள்ளீர்கள்.. நன்றி

    ReplyDelete
  2. தாதி தூது

    திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரின் மாலை மாற்றுப் பாடல் படித்தேன். இதற்கு முன்பும் இந்தப் பாடலைப் பார்த்து தலை சுற்றுகிறது என்று விட்டுவிட்டேன். சமீபத்தில் சீர்காழி தோணியப்பர் ஆலயம் சென்ற போதும் அங்குள்ள திருஞானசம்பந்தமூர்த்தி சந்நிதியில் இந்தப் பாடல் எழுதப்பட்டிருப்பதைக் கண்டேன். நண்பர்கள் யாரேனும் அதன் பொருளை விளக்குங்கள்.

    அந்தப் பாடலைப் படித்தவுடன் எனக்கு கவி காளமேகம் எழுதிய "தூது" எனும் பாடல் நினைவுக்கு வந்தது. இது என்னடா இது தலைவலி என்று நினைக்கமாட்டீர்கள் என்று நினைத்து அதனை இங்கு தருகிறேன்.

    தா திதூ தோதீது தத்தைதூ தோதாது
    தூ திதூ தொத்தித்த தூததே - தாதொத்த
    துத்திதத் தாதே துதித்துத்தேத் தொத்தீது
    தித்தித்த தோதித் திதி.

    பொருள் விளங்குகிறதா? இங்கு நான் விடுகதை போடவிரும்பவில்லை. இதன் பொருளையும் தந்து விடுகிறேன். இந்தப் பாடல் ஒரு தலைவனின் பிரிவால் தலைவி ஒருத்தி துன்பம் அடைந்து வாடினாளாம். ஆதலால், அவளுடைய தாய் தெய்வத்தைத் தொழுது அவள் துன்பத்தைப் போக்க முயன்றாள். அதற்கு ஒன்றும் பலன் இல்லை. என்ன செய்வது. தலைவியே அதற்கொரு மருந்து சொல்கிறாள். என்ன அந்த மருந்து தெரியுமா? என் காது குளிர என் தலைவனின் பெயரைச் சொல்லிக் கொண்டிரு. அந்த பெயர் என்னுடைய துன்பத்தை நீக்கி என்னை காக்கும் என்கிறாள். அந்தத் தலைவியின் கூற்றாக அமைந்தது இந்தப் பாடல். அவள் என்ன சொல்கிறாள்?

    தாதி தூதோ தீது = அடியவர்களைத் தூது விடுவது தீது பயக்கும், அது சரி வராது. இங்கு தாதி என்பதை வேலைக்காரி என்றும் கொள்ளலாம்.
    தத்தை தூது ஓதாது = தத்தை என்றால் கிளி. கிளியைத் தூது அனுப்பினால் அதற்கு ஒன்றும் தெரியாது. தூது போகாது.
    தூதி தூது ஒத்தித்த தூததே = தோழியை தூது அனுப்புவது உடனடியாகப் பயன் தராது. கால தாமதமாகும்.
    தாது ஒத்த = மலர்களில் இருக்கும் மகரந்தத்தைப் போல
    துத்தி தத்தா = உடலில் வரும் பசலை (தேமல்) என் மீது பரவாமல்
    தே துதித்து = இறைவனை வழிபடுவதாலும்
    தேத் தொத்தீது = எந்த பயனும் ஏற்படப்போவதில்லை
    தித்தித்தது = எனக்கு இனிப்பாக இருக்கும் என் தலைவனின் பெயரை
    ஓதித் திதி = சொல்லிச் சொல்லி என்னைக் காப்பாயாக!

    என்ன ஓசை அது? என்னை அடிக்க வருகிறீர்களா என்ன. ஓடிவிடுகிறேன்.

    ReplyDelete
  3. தெரியாது என்பதைச் சொல்ல முதல் பின்னூட்டம்
    வேண்டாம் என்று இருந்துவிட்டேன்..

    அதிலே சில வார்த்தைகளுக்கு மாத்திரம் பொருள் தெரிந்தாலும்
    காணா = சிறிய பாம்பு...
    கா = காப்பாற்று
    மாயா = சக்தி, காழி = உறுதி...
    இப்படியாக..... எனினும்..

    பாடலின் பொருளை தெரிந்தவர்கள் தான் கூறவேண்டும்....

    /////இது மிகப் பெரிய விசயம்,
    பல பக்கங்கள் பிடிக்கும் ..////
    அப்படியானால் நண்பர், எடப்பாடியார் விளக்கம் தருவார் பார்ப்போம்..

    ReplyDelete
  4. வணக்கம் ஆலாசியம்,

    //அப்படியானால் நண்பர், எடப்பாடியார் விளக்கம் தருவார் பார்ப்போம்..//

    உண்மைதான் தோழரே..

    புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
    நட்பாங் கிழமை தரும்.

    என்ற திருக்குறளை நினைந்தும் உம்மை நினைந்தும்
    மகிழ்ச்சி அடைகிறேன்.

    அடியேன் கோவையில் இருக்கிறேன்.
    இந்த வாரத்தில் எடப்பாடி சென்றதும் இதற்கான
    பதிலை பதிவாக தர முயல்கிறேன். அதற்குள் அன்பர் பெருமக்கள் தந்தாலும் அனைவரும் அதை படித்து உய்வோம்..

    ஆனால் ஒரு விசயம் அந்தப் பதிகத்திற்கான பதில் மிகப் பெரியது - இந்த ஒரு பதிகத்திற்கான பதிலை அடியேன் கோவை கற்பகம் பல்கலைக் கழகத்தில் 2 மணி நேர சொற்பொழிவில் - 30 நிமிடங்களுக்கும் மேலாக பேசியிருக்கிறேன்.

    திருவருள் இருப்பின் சிந்திப்போம்.
    நன்றி...

    ReplyDelete
  5. பின்னூட்டம் இட்ட மூவருக்கும் நன்றி.
    இதுபோலவே ஒரு தலை சுற்றக்கூடிய பாடலை எடுத்துக் காண்பித்த பெரியவருக்கு சிறப்பு நன்றி.விளக்கத்தை அளிக்க உள்ள சிவய‌சிசிவ இடைப்பாடி அன்பருக்கும் நன்றி. விளக்கத்தை அன்புடன், ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். தஙளுடைய வலைப்பூவிலேயே வெளியிட்டு இணைப்புக் கொடுத்தாலும் போதுமானது.

    ReplyDelete