இப்போது நடந்து முடிந்த மக்கட்த் தொகைக் கணக்குப்படி 2018 ஆம் ஆண்டு 18 வயதில் இருந்து 25 வயதுவரை உள்ள இளைஞர்களின் எண்ணிக்கை 30 கோடிக்கும் மேலே இருக்குமாம்.இது உலக நாடுகளிலேயே இளைஞர்களின் மக்கட்தொகையில் முதன்மையாக இருக்குமாம். இந்தக் கணக்கில் சீனா கூடப் பின்னால்தானாம்.
இதன் சாதக பாதகங்களை எண்ணிப் பார்த்தேன்.
சாதகமே நிறையத் தெரிந்தது.
முதலில் ஓட்டுரிமை பெற்ற ஒரு பெரிய இளைஞர் கூட்டம் இருக்கப் போகிறது.அன்னா ஹசாரேவுக்குப் பின்னால் நிற்கத் துணிந்த இளைஞர்களைக் கண்டோம்.சிறுமை கண்டு பொங்கக் கூடிய ஒரு பட்டாளம் இளைமைத் துடிப்புடன் வெளி வந்தால் புரட்சிதான்.
புதிய பாதைகள், புதிய கண்டு பிடிப்புக்கள்,புதிய யுக்திகள் கோலோச்சும்.
ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானமாக வாழ்வதால்,கலப்புத் திருமணம், காதல் கடிமணம் அதிகமாகும். சாதிக்கட்டுக்கள் தளரும்.'இதெல்லாம் சஹஜமப்பா' என்ற மனோநிலை வரும்.
வாழ்வாதாரங்களை மேம்படுத்தப் பல நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஒவ்வொருவரும் தகுதியுள்ளவற்றிற்கே இங்கு இடம் என்னும் பரிணாமக் கொள்கையால் பாதிப்பு அடைந்துள்ளதால், தன் தகுதிகளை மேம் படுத்திக்கொள்ள ஒவ்வொரு இளைஞனும் பாடுபடுவான்.
அதனால் உற்பத்திபெருகும். நாடு வளம் பெரும். இப்படி பல சொல்லிக் கொண்டே போகலாம். பல சொல்லக் காமுறவில்லை
எதிர்மறையில் ஒன்று மட்டும் சொல்லிக்கொள்ள விழைகிறேன். ஒழுக்கம் குன்றி விட்டால் எல்லாக் கற்பனைகளும் தவிடு பொடியாகிவிடும்.
டாஸ்மாக் கடைகள் நமது பெரும் வில்லனாக இருக்கும் என்று தோன்றுகிறது.அதற்கு எதிரான பிரச்சாரம் அவசியம் தேவை.
நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கும்!
சிறியன சிந்திக்க வேண்டாம்!