சென்ற ஆக்கத்தில் 'மனமது' என்று சேர்த்து எழுதியது ஏதோ "மது"வை நினைவு படுத்துவது போல உள்ளது என்று பெரியவர் கோபாலன் அவர்கள் கூறியிருந்தார்.
அதை ஒட்டி எழுந்த சில எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.
முன்பெல்லாம் பதம் பிரித்து எழுதுவது குற்றமாகவே நினைக்கப்பட்டது. செய்யக்கூடாத இலக்க்ணப் பிழையாகவே கருதப்பட்டது. ஆனால் இன்று வெண்பாக்களைக் கூட பதம் பிரித்துச் சொல்ல வேண்டியுள்ளது.
"ஊக்கமது கைவிடேல்" என்பதற்கு ஊக்கம் அளிக்கக்கூடிய மதுவை, சாராயத்தைக் கைவிட வேண்டாம் என்பதாகவும் குயுக்தியாகச் சொல்லலாம் அல்லவா?அதுவும் சாராயத்திற்கு' உற்சாக பானம்' என்ற சொற்களை தினமலர் நாளிதழ் மக்கள் மனதில் பதித்து விட்டப் பிறகு நான் கூறிய பொருளைச் சொன்னால் அடுத்த தலைமுறை தங்களுடைய சாராயப் பழக்கத்திற்கு அவ்வையார் அளித்த அங்கீகாரம் என்று கூடப் பிரச்சாரம் செய்வார்கள்.
எனவே "ஊக்கம் அது கைவிடேல்" என்று பிரித்து எழுதி விடுவதே அவ்வைப் பாட்டிக்கு நாம் செய்யும் மரியாதை.
1980=90 களில் நாங்கள் நடத்தி வந்த சத் சங்கத்திற்கு ஒரு நாயர் வகுப்பைச் சார்ந்த அன்பர் வருவார். ஒருநாள் அவர் சிரித்துக்கொண்டே கூறினார்,
"கண்ண பரமாத்மா எங்கள் நாயர் வகுப்பைச் சார்ந்தவர் தான்!"
"அதெப்படி? அவர் யாதவர் என்று சொல்லலாம், இடையர்களோடு வளர்ந்ததால்!பிற்ந்ததோ அரசர் குலத்தில்!அப்புறம் எப்படி நாயர் என்று சொல்கிறீர்கள்?"
"சிறிது நேரம் முன்பு நீங்கள் பாடிய பாட்டை மீண்டும் பாடுங்கள்."
"தாயே யசோதா உந்தனாயர் குலத்துதித்த...."
"நிறுத்துங்கள்! பாருங்கள் நீங்களேதானே பாடுகிறீர்கள் 'நாயர் குலத்து உதித்த.."
"ஹைய்யோ ஹைய்யோ! அது 'உந்தன் ஆயர் குலத்து உதித்த' நாயர் சார்!
போனால் போகட்டும். நாயர்கள் இப்படி ஒரு சந்தோஷம் அடைந்தால் அடையட்டுமே" என்றேன்
அந்தக்காலத்தில் சாப்பாட்டுக் கடைகளில் பிராமணர்களுக்குத் தனிப் பந்தி இருந்ததாம்."அன்ன விக்ரயம்" கலிகாலத்தில் நடக்கும்;அதையும் பிராமணனே செய்வான் என்று கலிகாலத்தினைப் பற்றிச் சொல்லியுள்ளதாம். என் மாமியார் சொல்லிக் கேள்விப் பட்டேன். 'அன்ன விக்ரயம்' என்றால் உணவினை வியாபாரமாக விற்பது. அதாவது ஹோட்டல் நடத்துவது.
ஒரு ஹோட்டலில் இப்படி அறிவிப்புப் பலகை இருந்ததாம்:
"பிராமணர் கள் சாப்பிடும் இடம்"
இது தவறாகப் பதம் பிரித்ததால் வந்த விபரீதம்.
"பிராமணர்கள் சாப்பிடும் இடம்" என்று இருக்க வேண்டும்.
அதுசரி!இன்றைய தேதியில் வகுப்பு வித்தியாசம் இல்லாமல் எல்லோரும் கள், சாராயம் சாப்பிடுகிறார்களே என்று என்னவர் முணுமுணுக்கிறார்.
என்ன செய்வது? கலிகாலம்.
"அம்பிகா காபி ஸ்டோர்" என்ற போர்டை, குசும்பாக,அந்தக் கடை முன்பே போய் நின்று கொண்டு,
"அம்பி காகா பீ!"என்று உரக்கப் படித்து, அந்தக் கடைக்காரர் இதை கவனித்து,அப்படி படித்த சிறுவர்களைப் பிடிக்க ஓடி வந்தாராம். அவரிடம் இருந்து தப்பிக்க குதியங்கால் பிடரியில் பட ஓடி வந்தார்களாம் அந்தச் சிறுவர்கள்.
அந்தச் சிறுவர்களில் ஒருவர் என்னவர். மற்றவர் யார் என்பதை அவருடைய அனுமதி யில்லாமல் சொல்லக் கூடாது.
எல்லாம் தமாஷுக்காக எழுதப்பட்டது. யாரும் வேறு விதமாக நினைத்து சண்டைக்கு வராதீர்கள்.
" எல்லா சொல்லும் பொருள் குறித்தனவே "
ReplyDeleteஎன்பது தொல்காப்பியம் ...
மேலும் நமது தமிழுக்கு அமுதென்று பேர் ...
ஒரு சொல்லில் பல்வேறு வகையான பொருள்கள் அமைந்திருக்கின்றன என்ற ஒரு அரிய உண்மையை இப்படி நகைச்சுவையாக அனுகியிருக்கிறீர்கள் .. வாழ்த்துக்கள் ...
http://www.tamilhindu.com/author/thanjaigopalan/
ReplyDeleteமேற்கண்ட இணைப்பில் பெரியவர் கோபாலனின் கட்டுரைகள் பல வெளியாகி உள்ளன.அரசியல்,வரலாறு, பண்பாடு பற்றிய அவருடைய கருத்துக்களை அங்கே காணலாம்.அவருடைய அரசியல் கருத்துக்களுடன் நாம் ஒத்துப்போக முடிந்தாலும், முடியாவிட்டாலும்,அவருடைய எழுத்து எவ்வளவு கோர்வையாக உள்ளது என்பதற்கு அந்தக் கட்டுரைகள் உதாணமாக உள்ளன. விருப்பம் உள்ளவர்கள் பெரியவருடைய எழுத்துக்களை அங்கேயும் படிக்கலாம்.அவருக்கு 75 அகவைகள் முடிந்துவிட்டன. எவ்வளவு ஆழ்ந்த படிப்பும், படித்ததை கணினியில் தட்டச்சு செய்யவும் ஆகக் கூடிய நேரத்தையும், அவருடைய வயதைக் கொண்டு பார்க்கும் போது அவரைவிடக் குறைந்த வயதுடைய என்னைப் போன்றவர்கள் எங்கள் சோம்பலை நினைத்து வெட்கப்படத் தான் வேண்டும்.பெரியவர் கோபாலன்
நிறைய ஆக்கங்களைத் தர வேண்டும், வகுப்பறையிலும், அனுராதாவிலும்!
'///சிவ.சி.மா. ஜானகிராமன் said...
ReplyDelete" எல்லா சொல்லும் பொருள் குறித்தனவே "என்பது தொல்காப்பியம் ...மேலும் நமது தமிழுக்கு அமுதென்று பேர் ...ஒரு சொல்லில் பல்வேறு வகையான பொருள்கள் அமைந்திருக்கின்றன என்ற ஒரு அரிய உண்மையை இப்படி நகைச்சுவையாக அனுகியிருக்கிறீர்கள் .. வாழ்த்துக்கள் ..."///
நன்றி ஜானகிராமன்!சும்மா நகைச்சுவையாக மட்டுமே எழுதப்பட்டுள்ளது
பாரதியின் காலத்துக்கு முந்தைய பண்டிதர்கள் மிகவும் சிரமப்பட்டு தமிழில் சொற்களை ஒன்றோடொன்று கோர்த்து, படித்தால் எளிதில் புரிந்துகொள்ள முடியாத கடின நடையில், சொற்களும் பின்னிப் பிணைந்து பதம் பிரித்துப் புரிந்துகொள்ள முடியாதபடி எழுதிவந்தார்கள். அந்தப் பண்டிதத் தமிழைப் பாமரன் கையில் மிக எளிமையாக்கிக் கொடுத்தவன் பாரதி. தேவாரப் பாடல்களையும் அப்படியே படித்தால் பலமுறை படித்துச் சொற்களைப் பதம் பிரித்தபின்னர்தான் பொருள் புரியும். அதையே முதலிலேயே கோர்த்து எழுதப்பட்ட பதங்களைப் பிரித்துப் படித்தால் உடனே புரிந்துவிடும். ஆனால் அப்படிப் பிரித்து எழுதப்போக எனக்குச் சில தேவார அன்பர்களிடமிருந்து பாராட்டுக்குப் பதில் கண்டனங்களே எழுந்தது; தேவாரத்தைப் பதம் பிரித்து எழுதுதல் தவறு என்றனர். ஆகவே கூட்டுச் சொற்களை கவிஞர்களுக்கு விட்டுவிட்டு நாம் பாரதி வழியில் எளிமையாகவே எழுதுவோம். நல்ல முயற்சி, உங்களுக்குப் பாராட்டுக்கள்.
ReplyDeleteஇந்தக் கட்டுரையின் ரஸம் கெடாமல் நானும் ஒரு செய்தியைச் சொல்லட்டுமா? கச்சேரியில் பாகவதர் பாடிக்கொண்டிருந்தார். தியாகராஜரின் "எந்தரோ மகானுபாவுலு" எனும் பாடல். அப்போதுதான் உள்ளே நுழைந்த அவருடைய நண்பர், தன்னைத்தான் எந்த 'ரோ'வில் உட்காருகிறாய் என்று கேட்டதாக நினைத்துக் கொண்டு, முதல் 'ரோ'தான் என்றாராம்.
ReplyDelete///"சில தேவார அன்பர்களிடமிருந்து பாராட்டுக்குப் பதில் கண்டனங்களே எழுந்தது; தேவாரத்தைப் பதம் பிரித்து எழுதுதல் தவறு என்றனர்."///
ReplyDeleteபண்ணுடன் பாடும்போது,பதம் பிரித்தால் இசையும், தாளமும் போய்விடும்.இசை பற்றி நன்கு அறிந்தவர்கள் பதம் பிரிப்பதை விரும்புவதில்லை.பின்னூட்டத்திற்கு நன்றி!
/// "எந்தரோ மகானுபாவுலு" எனும் பாடல். ....."///
ReplyDeleteநல்ல வேடிக்கைதான்.
சமகம் ஓதிக்கொண்டு இருந்தார்களாம். 'சமே....சமே..' என்று அதில் நிறைய வரும்.பின்கட்டில் சமைத்துக் கொண்டிருந்த அம்மாளுக்கு எரிச்சல் வந்து விட்டதாம்.
"நானும் பார்க்கிறேன் 'சமே சமே' என்று விரட்டறேளே! சமைச்சுண்டுதானே இருக்கேன்!" என்றாளாம்!