திருவண்ணாமலை பகவான் ஸ்ரீரமண மஹரிஷி அதிகம் பேச மாட்டாராம். பேசினாலும் ரத்தினச் சுருக்கமாக வந்து விழுமாம்.
ஸ்ரீரமண ஆஸ்ரமம் ஆரம்பித்த புதிதில் எல்லாம் குடிசைகள்தான். இரவு ஹரிகேன் விளக்குதான். அப்போதே ஸ்ரீரமணருக்கு வெளிநாட்டுச் சீடர்கள் வர ஆரம்பித்து விட்டார்கள்.
வெளி நாட்டுக்காரர்கள் வந்து போவதால் ஸ்ரீரமணாஸ்ரமத்தில் நிறையப்பணம் இருக்கும் என்று சில தொழில் முறைத் திருடர்களுக்குத் தோன்றிவிட்டது.
ஒருநாள் நள்ளிரவில் ஆஸ்ரமத்தில் நுழைந்து அட்டகாசம் பண்ணிவிட்டார்கள்.
எல்லோரையும் எழுப்பி வரிசையாக நிறுத்தி விட்டார்கள்.
"இருட்டில் தேடுகிறீர்களே இந்தாருங்கள் விளக்கு" என்று ஹரிக்கேன் விளக்கைப் பொருத்திக் கொடுத்தாராம் ஸ்ரீரமணர்.
மண்ணைத் தோண்டிப் பார்த்தும் ஒன்றும் கிடைக்கவில்லை.கோவம் அடைந்து பக்தர்களை அடிக்கத் துவங்கினார்கள்.
'எங்கே ஒளித்து வைத்து உள்ளீர்கள்? சொல்லுங்கள்' என்று கேட்டு அடித்துள்ளார்கள்.
ஸ்ரீரமணர் மீதும் அடி விழுந்து விட்டது.பல மணி நேரம் தேடியும் ஒன்றும் கிடைக்காமல் திருடர்கள் ஓடிவிட்டார்கள்.
மறுநாள் காலை செய்தி ஊர் முழுவதும் பரவிவிட்டது.போலீசுக்கும் தெரிந்து
அந்த ஊர் காவல் ஆய்வாளர் ஆஸ்ரமத்திற்கு வந்து விசாரித்தார்.
"உங்களையும் அடித்தார்களா சுவாமி?" என்று கேட்டார்.
ஸ்ரீரமணர் சிரித்துக்கொண்டே, "சுவாமிக்கும் பூசை போட்டார்கள்" என்றாராம்
பூசை என்றால் அடித்தல் என்றும் பேச்சு வழக்கில் பொருள் உண்டு.
நல்ல சம்பவம்தான். திருடர்கள் தாங்கள் அறிந்த வகையில் பூசை நடத்தியுள்ளார்கள்.திருமங்கை மன்னன் பகவானிடமே திருடவில்லயா?!
ReplyDelete//ஸ்ரீரமணர் சிரித்துக்கொண்டே, "சுவாமிக்கும் பூசை போட்டார்கள்" என்றாராம்//
ReplyDeleteஉண்மைதான் இறைவன் உயிர்களோடு ஒன்றாய், உடனாய், வேறாய் என கலந்தே இருப்பதால் அவனுக்கும் பூசை உண்டே ...
////"இருட்டில் தேடுகிறீர்களே இந்தாருங்கள் விளக்கு" என்று ஹரிக்கேன் விளக்கைப் பொருத்திக் கொடுத்தாராம் ஸ்ரீரமணர்.////
ReplyDeleteஅவர் வந்த வேலையை செய்திருக்கிறார்.....
நகைச்சுவையும் அதன் நயமும் நன்று அதைக் கொண்டுவந்தப் பதிவும் நன்று .... நன்றி!.
//உண்மைதான் இறைவன் உயிர்களோடு ஒன்றாய், உடனாய், வேறாய் என கலந்தே இருப்பதால் அவனுக்கும் பூசை உண்டே ...//
ReplyDeleteபிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி படவில்லையா நம் பரமசிவன்!பின்னூட்டத்திற்கு நன்றி இடைப்பாடியாரே!
///"அவர் வந்த வேலையை செய்திருக்கிறார்.....
ReplyDeleteநகைச்சுவையும் அதன் நயமும் நன்று அதைக் கொண்டுவந்தப் பதிவும் நன்று .... நன்றி!"///
பெரியவர்களின் சொற்கள் கேட்க எளிமையகத்தான் இருக்கும். ஆனால் நிறைய பொருள் பொதிந்து இருக்கும்.
நம் கோவில்களை சன்னல் இல்லாமல் கர்பகிரஹத்தை குகைபோல் அமைத்து
இருட்டாக்கி அங்கே ஒரு விக்ரகத்தைப் பிரதிஷ்டை செய்து ,தீப ஒளி ஏற்றச் சொல்லி அந்த தெய்வ வடிவைக் காணச் சொல்கிறார்கள்.
ஊனினைச் சுருக்கி உள்ளொளி பெருக்கி உவப்பிலா ஆன்ந்தம் அடைய குருதேவர்கள் அழைக்கிறார்கள்.
மேற்படி பதிவில்,"இருட்டில் தேடுகிறீகளே;இந்தாருங்கள் விளக்கு!"என்பது, குருவாகப் பட்டவர் செய்ய வேண்டிய நற்செயல். சீடர்கள் அந்த விளக்கின் துணை கொண்டு மெய் ஞானத்தினைத் தேட வேண்டும்.
நன்று ஆலாஸ்யம் அவர்களே!. பின்னூட்டம் ஊக்கம் அளிக்கிறது.