என் அகத்துக்காரர் கொஞ்சம் செயலூக்கம் அதீதமாகப் பெற்றவர்.Hyperactive.!!
பொதுத் தொண்டு செய்கிறேன் என்று வீட்டைப் புறக்கணித்து விடுவார்.அவ்வப் போது அவரை நடைமுறை வாழ்க்கைக்கு இழுப்பதும் என் வேலை ஆகிப் போனது.
இவர் செய்யும் நற்செயலால் பலருக்கும் நன்மை ஏற்பட்டாலும்,ஒரு சிலர் பாதிப்பும் அடையக்கூடும், அப்படி பாதிப்புக்குள்ளனவர்கள் இவருக்கு எதிராகத் திரும்பக்கூடும் என்று யூகிக்கக் கூட மாட்டார்.
எடுத்துக்காட்டாக,இவர் ஒரு மாலை நேர இலவச மருந்தகம் நடத்தினால் உடனடி பாதிப்பு அந்தப் பகுதியில் கிளினிக் வைத்துள்ள மருத்துவர், மருந்துக்கடை ஆகியவர்களுக்கு வருமான இழப்பு. அவர்கள் இவருடைய நற்செயலை அழிக்கத் திட்டம் போடுவர்.இது தெரியாமல், 'எங்கேயோ இடிக்கிறதே' என்று வீட்டில் வந்து புலம்புவார்.நான் புலன் ஆய்வு செய்து இவருக்குச் சொல்ல வேண்டும்.
"ஒன்றே செய் அதையும் நன்றே செய்!" என்று அடிக்கடி கூறுவார்.அதற்காக ஒரு செயல் கிடைத்துவிட்டால் அந்தச் சிந்தனையில் முழுமையாக ஆழ்ந்து, தினசரி நடைமுறையான குளித்தல், உண்ணுதல், உறங்குதல், வழிபாடு
எல்லாவற்றையும் துறந்து 'கொக்குக்கு ஒன்றே மதி' என்பது போல பித்தனைப் போல ஆகிவிடுவார்.
ஒரு சமயம், அவரிடம் கேட்டேன்:"என்ன, ஒரு சுவாமி நமஸ்காரம் கூடச் செய்யாமல் அப்படிப் பொதுத் தொண்டு?"
அவருடைய பதில் ஒரு பாடலாக வந்தது:
"மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம்
மனமது செம்மையானால் வாசியைக் கட்ட வேண்டாம்
மனமது செம்மையானால் பூசனைகள் புரிய வேண்டாம்
மனமது செம்மையானால் மரணத்தை வெல்ல லாமே"
"இது யார் பாடல்?"
"திருமூலர் பாடல் என்று தோன்றுகிறது"
"அந்தப் பாடலில் நான்கு முறை 'ஆனால், ஆனால்' என்று வருகிறதே; அதைப் பற்றிச் சிந்தித்தீர்களா?"
"சிந்திக்கவில்லை. நீதான் என்ன என்று விளக்கேன்"
"அது ஒரு BIG IF !அந்தப் பாடலையே நான் மாற்றிச் சொல்கிறேன் பாருங்கள்.அப்போது சரியான பொருள் விளங்கும். இலக்கணத்தைப் பார்க்காதீர்கள்"
"சரி சொல்லு தாயே!"
"மனமது செம்மையுறாதோன் மந்திரம் செபிக்க வேண்டும்
மனமது செம்மையுறாதோன் வாசியைக் கட்ட வேண்டும்
மனமது செம்மையுறாதோன் பூசனைகள் புரிய வேண்டும்
மனமது செம்மையுறாதோன் மரணத்தை வெல்லல்அரிது"
"நீ சொல்வதுதான் சரியான பொருள்.ஏற்றுக் கொண்டு இனி ஒழுக்கத்திற்கு வருகிறேன்"
வேதாளம் அடுத்த முருங்கை மரத்தில் ஏறும் வரை இது தாங்கும்!
உங்கள் 'உல்டா'பாட்டின் இலக்கணமும் ஓரளவு சரியாகத்தான் உள்ளது.
ReplyDeleteநம் சோம்பலுக்குப் பெரியவர்களின் வார்த்தையை எல்லாம் நமக்குச் சாதகமாகப் பேசக்கூடாது என்று நன்றாக உணர்த்தி விட்டீர்கள். பதிவு நன்றாகவும் எளிமையாகவும் உள்ளது.
தாங்கள் துவங்கியுள்ள இவ் வலைப் பூ மேன்மேலும் வளர எல்லாம்வல்ல இறைவனை சிந்தித்து வாழ்த்துகிறோம்...
ReplyDeleteஎழுத்தும் மிக அழகாக வருகிறது ..
பல ஆண்டுகளுக்கு முன்பு அவர் நடத்தி வந்த மாலை நேர இலவச மருத்துவ சேவையில் இராமபிரானுக்கு அணில் சேவை செய்ததைப் போல சிலகாலம் நானும் அன்பர் இராதாகிருஷ்ணனும் ஒத்துழைத்தோம். அக்கம் பக்கத்து கிராம மக்களுக்கு அடையாள அட்டை வழங்கி, இலவச மருந்துகள் கொடுத்து வர, இது இலவசம் தானே என்று ஒரு அலட்சியம் பரவத் தொடங்கியது. ஒரு ரூபாய் உண்டியலில் போட வேண்டுமென்று கோரிக்கை வைத்த போது அங்கு வந்து இலவசமாகப் பணியாற்றிய மருத்துவருக்கு "ஒரு ரூபாய்" டாக்டர் என்று மக்கள் நாமகரணம் செய்விக்க அவர் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவிட்டார். அந்த சேவையும் ஒரு நாள் முடிவுக்கு வந்தது. காரணம் இப்போது நீங்கள் சொல்வதிலிருந்து தெரிகிறது. தர்ம காரியம் செய்வதற்கும் எப்படி இடையூறு ஏற்படுகிறது என்பதை யூகிக்கக்கூட முடியவில்லை. போட்டி, பொறாமை நிறைந்த உலகம். கவி கா.மு.ஷெரீப் எழுதிய பாட்டு ஒன்று நினைவுக்கு வருகிறது. "வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும், வையகம் இதுதானடா!"
ReplyDeleteதவறு கண்டுபிடிக்கவென்று எழுதவில்லை. "மனமது செம்மையானால்..." என்று தலைப்பு கொடுத்திருக்கிறீர்கள். பாபநாசம் சிவன் அவர்கள் எம்.கே.தியாகராஜ பாகவதருக்குப் பாடல்கள் அதிகம் எழுதியவர். அவர் ஒரு படத்திற்காக எழுதிய பாடலில் "முகமது சந்திர பிம்பமோ" என்று எழுதிக் கொடுத்தார். அதைப் படித்த இயக்குனரும், பிறரும் இது என்னய்யா, முகமது, இந்து என்று. வேறு சொல்லைப் போட்டு எழுதுங்கள் என்றனர். சிவம் உடனே அதை மாற்றி "வதனமே சந்திர பிம்பமோ" என்றெழுதினார். அதைப் போல மனம் + மது என்பது "மனமது" என வருகிறது. "மனம் செம்மையானால்" என்றிருந்தால் நன்றாக இருக்கும் என்பது எனது கருத்து. ஏற்றுக்கொள்வதும், இல்லாததும் உங்கள் உரிமை.
ReplyDelete//Thanjavooran said"அணில் சேவை செய்ததைப் போல சிலகாலம் நானும் அன்பர் இராதாகிருஷ்ணனும் ஒத்துழைத்தோம்"//
ReplyDeleteஆமாம். நினைவு இருக்கிறது.உங்கள் ஒத்துழைப்பு எல்லாம் இல்லாமல் இவராக் தனியாக என்ன செய்திருக்க முடியும்?
//சிவ.சி.மா. ஜானகிராமன் said...
ReplyDeleteதாங்கள் துவங்கியுள்ள இவ் வலைப் பூ மேன்மேலும் வளர எல்லாம்வல்ல இறைவனை சிந்தித்து வாழ்த்துகிறோம்...
எழுத்தும் மிக அழகாக வருகிறது ..//
வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி!நண்பர்கள்டன் அடிக்கடி இங்கே
வருகை தாருங்கள்!
"///Thanjavooraan said.. மனம் + மது என்பது "மனமது" என வருகிறது. "மனம் செம்மையானால்" என்றிருந்தால் நன்றாக இருக்கும் என்பது எனது கருத்து. ஏற்றுக்கொள்வதும், இல்லாததும் உங்கள் உரிமை."///
ReplyDeleteசிறிய மாற்றம் செய்துள்ளேன். சரி பார்க்கவும். தங்கள் ஆலோசனைக்கு நன்றி!
வகுப்பறையில் வாத்தியாரும் ,நீங்கள் எல்லோரும் எழுதுவதைப் பார்த்து ஊக்கம் பெற்று இங்கே புதிதாக வந்துள்ளேன்.
வகுப்பறையில் எழுதுவதைப் போல இங்கேயும் கட்டுரை தர வேண்டுகிறேன்.
உங்கள் எழுத்துக்களை வெளியிட மகிழ்ச்சி அடைவேன்.தங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகப்படுத்த வேண்டுகிறேன்.
நன்றி. எனது ஆலோசனையை ஏற்று தலைப்பை மாற்றியது கண்டு மகிழ்ச்சி. நிச்சயம் கட்டுரைகளை அவ்வப்போது அனுப்பி வைப்பேன். நாளைய வகுப்பறை வலைப்பூவில் என் கட்டுரையொன்று வெளியாகிறது. ஆசிரியர் தெரிவித்தார். அது கே.எம்.ஆர். கட்டுரையையும், அதற்கு கொடுக்கப்பட்ட ஒரு பின்னூட்டத்தையும் சார்ந்து எழுதப்பட்ட கட்டுரை. உங்கள் கருத்தைக் கூறுங்கள். விரைவில் உங்கள் வலைப்பூவிற்கும் என் கட்டுரை வரும். மீண்டும் நன்றி.
ReplyDeleteஇன்றுதான் எல்லாவற்றையும் படித்தேன். எழுத்து இயல்பாக வருகிறது உங்களுக்கு. இன்னும் முன்னதாகவே நீங்கள் எழுத ஆரம்பித்திருக்கலாம் என்று தோன்றியது. தொடர்ந்து வருகிறேன்.
ReplyDeleteஅப்புறம் இந்த வோர்ட் verification ஐ எடுத்துவிடுங்கள்.
ReplyDelete//Uma said...
ReplyDeleteஇன்றுதான் எல்லாவற்றையும் படித்தேன். எழுத்து இயல்பாக வருகிறது உங்களுக்கு. இன்னும் முன்னதாகவே நீங்கள் எழுத ஆரம்பித்திருக்கலாம் என்று தோன்றியது. தொடர்ந்து வருகிறேன்.//
இபோதான் அவரை கேட்டேன்!'டெல்லி உமா வருவாரோ எனது வலைப்பூவிற்கு?'என்று. பிளாக் ஐத் திறந்தால் உங்கள் பின்னூட்டம்!மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது.
அடிக்கடி வாருங்கள். ஆலோசனையும், கட்டுரையும் தாருங்கள். ஏதோ கிழம் கட்டைகள் நடத்தும் பிளாக் என்று இல்லாமல், இளைஞ்ர்களுக்கு உபயோகமான
செய்தியைத் தருவோம்,தரத்துடன்!நன்றி!
///Uma said...அப்புறம் இந்த வோர்ட் verification ஐ எடுத்துவிடுங்கள்.///
ReplyDeleteஎடுத்தாச்சு. சோதித்துப் பார்த்து சொல்லவும்
அடிக்கடி வாருங்கள். ஆலோசனையும், கட்டுரையும் தாருங்கள். ஏதோ கிழம் கட்டைகள் நடத்தும் பிளாக் என்று இல்லாமல், இளைஞ்ர்களுக்கு உபயோகமான செய்தியைத் தருவோம்,தரத்துடன்//
ReplyDeleteகண்டிப்பாக வருகிறேன். என்ன இப்படிச் சொல்கிறீர்கள்? சும்மா ஜாலியா பின்னூட்டம் போடுவேனே தவிர, பெரியவர்கள் எழுதியது என்றால் போரடிக்கும் என்று நினைப்பதில்லை. வகுப்பறை தவிர இன்னும் நிறைய ப்ளொக்ஸ் (எல்லாமே சீரியஸ் விஷயங்களைப்பற்றி எழுதப்படுபவை) படிக்கும் வழக்கம் உண்டு. வகுப்பறையில் எல்லாரையும் ஓரளவுக்கு பரிச்சயம் இருப்பதால் பின்னூட்டம் அதுமாதிரி இருக்கும். நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள். மற்றபடி ஆலோசனை சொல்லும் அளவிற்கு எனக்குத் தகுதி இருப்பதாக நான் நினைக்கவில்லை. நான் எழுதுவது கூட எழுதித்தான் பார்க்கலாமே, பழகலாமே என்றுதான். அதுவே தொடர்ந்து எழுத நேரமின்மை தடுக்கிறது.
எடுத்தாச்சு. சோதித்துப் பார்த்து சொல்லவும்// போயே போச்! நன்றி!
ReplyDeleteஜெயலக்ஷ்மி டீச்சர் என்று ஒருவர் என்னுடைய தொடக்கப் பள்ளியில் பணியாற்றினார். அதுவும் எனக்குப் பக்கத்து வகுப்பிற்கு தான் பாடம் எடுத்தார்கள்; இருந்தும் நான் இரண்டாம் வகுப்பில் இருந்து ஐந்தாம் வகுப்பு முடித்து வரும் வரை எந்த வகுப்பில் அமர்ந்திருந்தாலும் என்னை தேடி வந்து அவர்களுக்கு தண்ணீர் பிடித்து வரவும் தேநீர் வாங்கி வரவும் எனது வகுப்பாசிரியரிடம் அனுமதி வாங்கி நாள் தோறும் என்னையே செய்யச் சொல்வார்கள்... அது எனது சுத்தத்திற்கு கிடைத்த அங்கீகாரம்...
ReplyDeleteதாங்களும் ஒரு ஆசிரியையாக இருந்து ஓய்வு பெற்றவர்.. உங்களின் ஸ்ரீ நாமமும் அதே ஜெயலக்ஷ்மி என்ற உடன் சற்று... எனது தொடக்கப் பள்ளி ஞாபகம் வந்துவிட்டது.
வலைப் பூவில் என்றும் குறிஞ்சியும், முல்லையும், மல்லிகையும், தாமரையும், அல்லியுமாக அத்தனையும் பூத்துக் குலுங்கி மனம் பரப்ப இறைவனை வேண்டிக் கொள்கிறேன்....
////அதற்காக ஒரு செயல் கிடைத்துவிட்டால் அந்தச் சிந்தனையில் முழுமையாக ஆழ்ந்து, தினசரி நடைமுறையான குளித்தல், உண்ணுதல், உறங்குதல், வழிபாடு
ReplyDeleteஎல்லாவற்றையும் துறந்து 'கொக்குக்கு ஒன்றே மதி' என்பது போல பித்தனைப் போல ஆகிவிடுவார்.////
பொதுவாக மானுட சேவை செய்பவர்கள் தர்மத்தை அமரச் செய்து நகர்ந்து வரும் தேரைப் போன்றவர்கள்.... தேர் சக்கரங்கள் வீதியிலே உருளுவதை தான் தனது தர்மமாக / தனக்கு விதிக்கப் பட்ட நியதியாக நினைக்கும்; உயரத்தில் இருக்கும் சாமியை தொட்டு வணங்க முடியாத எல்லோரும் அந்த புழுதி படிந்த சக்கரத்தையே அந்த தெய்வமாக எண்ணி வழிபடுவதை நாமும் பலநேரங்களில் காண்கிறோம்....
ஆக்கம் அருமை..... தொடர்ந்து எழுதுங்கள்.... நன்றி.
jaya akka ! your blog is very interesting. welcome to this wonderful world. Keep abreast with your life partner in updating the blog.
ReplyDelete///"வலைப் பூவில் என்றும் குறிஞ்சியும், முல்லையும், மல்லிகையும், தாமரையும், அல்லியுமாக அத்தனையும் பூத்துக் குலுங்கி மனம் பரப்ப இறைவனை வேண்டிக் கொள்கிறேன்...."///
ReplyDeleteஉங்கள் வருகைக்கு நன்றி ஆலாஸ்யம் அவர்களே!தங்கள் வேண்டுதல்படியே நல்ல ஒரு வலைப்பூவாக இது மலரும். ஆண்டவன் துணை நமக்கு உண்டு.
//பொதுவாக மானுட சேவை செய்பவர்கள் தர்மத்தை அமரச் செய்து நகர்ந்து வரும் தேரைப் போன்றவர்கள்....//
ReplyDeleteநல்ல எடுத்துக்காட்டு. நன்றி!
தாங்களும் இங்கு எழுதலாம். இது ஒரு தனிப்படவரின் வலைப்பூவல்ல. பொதுவானது.எதை எழுதினாலும் போடுவேன். எனக்கு ஏற்பில்லாத செய்தியை மட்டும், 'கருத்துக்கள் ஆக்கியவருடையது' என்ற குறிப்புடன் வெளியிடுவேன்
///Responsible Citizen said...
ReplyDeletejaya akka ! your blog is very interesting. welcome to this wonderful world. Keep abreast with your life partner in updating the blog.///
thank you kumar! please introduce this blog to friendsn