Saturday, 23 April 2011

ஓம் ஸ்ரீகணேசாய நம:


நமது வலைப் பூவை பிள்ளையார் வணக்க‌த்துடன் துவங்குவோம்!

பிள்ளையார்ப்பட்டி என்றாலே செட்டிநாட்டுக் கோவிலையே எல்லோரும் அறிவோம்.ஆனால் தஞ்சையை அடுத்து ஒரு பிள்ளையார்ப்பட்டி உள்ளது.

அங்குள்ள பிள்ளையார் பெரிய திருமேனி.ஓர் ஐந்தரை அடி உள்ள‌ நபர் பிள்ளையார் பின்னால் நின்று கைகளைத் தூக்கினால் அந்த நபரின் உருவம் தெரியாது. அந்த அளவு உருவம் பெரியது.

பெரியகோவில் நந்திக்கு இணையாக வைக்க இந்தப் பிள்ளையார் எடுத்துச் செல்லப்பட்டதாகவும், வழியில் அச்சு முறிந்து சாலையிலேயே அமர்ந்து விட்டதாகவும், பின்னர் அங்கிருந்து நகர்த்த‌ முடியவில்லை என்றும் அதனால் சாலை மீதே சிறிய கோவில் அமைக்கப்பட்டதாகவும் செவி வழிச்செய்தி கூறுகிறது.சாலை மீது கோவில் இருப்பதை உணர முடிகிற்து.ஏனெனில் அந்த இடத்தில் சாலை நனகு வளைந்து போகிறது.நாம் கேட்கும் செய்தி உண்மையானால் கோவில் 1000 வருடப் பாரம்பரியம் உள்ளதாகும்.

சிலை செய்யும் போதே பாரதம் எழுத முறிந்த கொம்பு விநாயகர் கையில் உள்ளது போல முறையாகச் செய்யப்பட்டுள்ளது.ஆனால் நன்கு இருக்க வேண்டிய மற்றொரு கொம்பும் முறிந்த நிலையில் காண்கிறது.இது சமீபகாலத்தில் அபிஷேகம் செய்யும் போது குடம் விழுந்து முறிந்துவிட்டதாம். அதன் பின்னர் நீண்ட காலம் பின்னம் அடைந்த விக்ரஹம் என்று பயந்து வழிபாடே நின்று போய் உள்ளது.

சமீபமாக கும்பாபிஷேகம் ஆகி, முன் மண்டபம் எல்லாம் கட்டப்பட்டு அழகுற‌ விளங்குகிறது கோவில்.

தஞ்சை=வல்லம் சாலையில் மருத்துவக்கல்லுரி,தென்னகப்பண்பாட்டு மையம் தாண்டியவுடன்,வல்லம் வருமுன்னரே சாலையின் மீதே உள்ளது இக்கோவில்.
முடிந்தால் ஒருமுறை தரிசியுங்கள்.

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்திமகன் தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே!

வித்தக விநாயக விரைகழல் சரணே!!!!!

7 comments:

  1. நல்ல துவக்கம்! நிறையத்தாருங்கள்! ஆவலுடன் காத்துஇருக்கிறோம்.

    ReplyDelete
  2. தலைப்பை நன்றாகப் போடுங்கள்
    தானே வருவார்கள்!
    எழுதுவதை நன்றாக எழுதுங்கள்
    எல்லோரும் படிப்பார்கள்!

    ReplyDelete
  3. I gratefully remember that you were responsible for my joining a Gold Chit with a local Jewellers so that I could purchase sufficient gold jewels for my daughter's marriage. You will be surprised that I did not have any savings until my retirement. I would not have been able to perform my daughter's marriage without your guidance for savings. Thanks a lot and wish you a long life.

    ReplyDelete
  4. ஜெயாவுக்கு,
    திருமண நாள் நல் வாழ்த்துக்கள்.
    அனுராதா வலைப்பூவில் நிறைய மனங்கள் சங்கமிக்கட்டும்.
    "சத்யம் ப்ரூயாத்; ப்ரியம் ப்ரூயாத்; அசத்யம் அப்ரியம் ந ப்ரூயாத்" என்பது உபனிஷதம் சொல்லும் அறிவுரை. "உண்மையைச் சொல்க; இனிமையாய்ச் சொல்க; உண்மையும் இனிமையும் அல்லாதவற்றை சொல்லற்க" என்பதே பொருள். உணர்ந்து செயல்படுக.
    மீண்டும் வாழ்த்துக்களுடன்

    ReplyDelete
  5. //SP.VR. SUBBAIYA said...
    தலைப்பை நன்றாகப் போடுங்கள்
    தானே வருவார்கள்!
    எழுதுவதை நன்றாக எழுதுங்கள்
    எல்லோரும் படிப்பார்கள்!//

    தங்கள் அறிவுரயை மேலானதாக நினைக்கிறேன் ஐயா!
    பதிவுலகத்திலேயே தலைமையிடத்தைப் பெற்ற தாங்கள் என் பதிவுக்கு வந்து ஆசி கூறியது மனத்திற்கு உற்சாகம் அளிக்கிறது.

    ReplyDelete
  6. ///Thanjavooraan said...
    I gratefully remember that you were responsible for my joining a Gold Chit with a local Jewellers so that I could purchase sufficient gold jewels for my daughter's marriage. You will be surprised that I did not have any savings until my retirement. I would not have been able to perform my daughter's marriage without your guidance for savings. Thanks a lot and wish you a long life //


    நீங்கள் என்னைப் பாராட்டக் கூட செய்தி இருக்கிறது என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதை நான் சற்றும் எதிர் பார்க்கவில்லை.

    இயல்பாகவே சிறுவயது முதலே என் பாட்டி தாத்தாவிற்காகச் சென்னை திருவல்லிக்கேணி பஜாரில் பொருட்கள் வாங்கிப் பழக்கம்.எப்போதும் பொருட்களின் விலையை கிரிக்கெட் ஸ்கோர் போல பார்த்துக் கொண்டு இருந்தே பழகிவிட்டது.அந்தப் பழக்கம் சேமிப்பில் கொண்டு நிறுத்தியது. 3 பெண்கள் ஆனதால் அவர்களுக்காக சேமிக்க வேண்டும் என்ற எண்ணத்தால்
    தங்த்தின் பால் ஈடுபாடு சென்றது. என்னுடன் வேலை பார்த்த பல ஆசிரியைகளுக்கும் நகைச்சீட்டை அறிமுகப்படுத்தி தங்களைப் போலவே என் தொடர்பால் சேமிப்புப் பழக்கம் வந்ததாகக் கூறியுள்ளனர்.இயல்பாக நடந்த விஷயம். பாராட்டும்படி ஒன்றுமில்லை.மிக்க வந்தனம்.

    ReplyDelete
  7. //KRISHNAN KANNAN said...
    ஜெயாவுக்கு,திருமண நாள் நல் வாழ்த்துக்கள்.அனுராதா வலைப்பூவில் நிறைய மனங்கள் சங்கமிக்கட்டும்."சத்யம் ப்ரூயாத்; ப்ரியம் ப்ரூயாத்; அசத்யம் அப்ரியம் ந ப்ரூயாத்" என்பது உபனிஷதம் சொல்லும் அறிவுரை. "உண்மையைச் சொல்க; இனிமையாய்ச் சொல்க; உண்மையும் இனிமையும் அல்லாதவற்றை சொல்லற்க" என்பதே பொருள். உணர்ந்து செயல்படுக.மீண்டும் வாழ்த்துக்களுடன்//

    தங்க‌ளுடைய‌ வாழ்த்துக்களைப் பெரிதும் மதிக்கிறேன்.என் நமஸ்காரங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.=உங்களுக்கும் மன்னிக்கும்!

    கூடியவரை குறைகளையெல்லாம் சொல்லாமல்,சுவையான செய்திகளையே சொல்ல வேண்டும் என்பதே என் நோக்கம்.

    'படித்த‌வன் பாட்டைக்கெடுத்தான், எழுதியவன் ஏட்டை கெடுத்தான்' என்பதும் உண்மைதானே.அந்த மோன நிலை வரவே நிறையப் பேச வேண்டியுள்ளது. தங்களின் அறிவுரைப்படி ஜாக்கிரதையாக நடந்து கொள்கிறேன்.

    ReplyDelete