Monday 6 June 2011

"Then drop "I" and "want"! "


ஸ்ரீ ரமண மஹரிஷி ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில் வாழ்ந்ததால் அவரது பள்ளிப் படிப்பில் ஆங்கிலமும் உண்டு. எனவே அவரால் ஆங்கிலம் புரிந்து கொள்ளவும் சிறிது பேசவும் முடியும்.

ஒரு முறை ஓர் ஆங்கிலேய கனவான் ஸ்ரீரமணரிடம் வந்தார்.அந்த ஆங்கிலேயர் சற்றே பரபரப்பாகக் காணப்பட்டார்.ஸ்ரீ ரமணர் அவரைப் பார்த்து ஆங்கிலத்தில்,

"What do you want?" என்று கேட்டார்.

அந்த ஆங்கில கனவான்,"I want peace" என்று மறு மொழி சொன்னார்.

"Then drop "I" and "want"! "  என்றார் மஹரிஷி.

அந்த கனவான் சொன்ன மூன்று சொற்களில் முதல் இரண்டை விலக்கிவிட்டால் மீதமுள்ளது அமைதிதானே! நான் என்ற அகங்காரத்தையும், பார்த்த பொருட்களையெல்லாம் அடைய ஆசைப்படுதலும் தான் அமைதி
இன்மைக்குக் காரணம்.  அந்த இரண்டையும் தியாகம் செய்துவிட்டால் அமைதி தானகக்கிட்டும் என்பதை இரத்தினச் சுருக்கமாகக் கூறினார் மஹரிஷி!
‍‍‍‍‍‍‍‍‍‍‍===================================================================
பி கு: நானும் என்னவரும் இலண்டன் செல்ல இருப்பதால், அந்நாட்டு நுழைவு அனுமதி= விசா= போன்றவற்றிற்காக அலைந்து கொண்டுள்ளோம்.எனவே பதிவு இடுவதில் தாமதம் பொறுத்தருள்க.