Saturday 7 May 2011

தாயும் ஆனவர்




பக்திநெறி நிலைநின்றும், நவ கண்ட பூமிப்
     பரப்பை வலமாக வந்தும்,
  பரவை இடை மூழ்கியும், நதிகள் இடை மூழ்கியும்,
     பசிதாகம் இன்றி எழுநா

மத்தி இடை நின்றும், உதிர் சருகு புனல் வாயுவினை
    வன்பசி தனக்கு அடைத்தும்,
  மெள‌னத்து இருந்தும்,உயர் மலைநுழைவு புக்கியும்,
    மன்னு தச நாடி முற்றும்

சுத்திசெய்தும்,மூலப் பிராணனோடு அங்கியைச்
    சோம வட்டத்து அடைத்தும்,
  சொல் அரிய அமுதுண்டும்,அற்ப உடல் கற்பங்கள்
    தோறும்நிலை நிற்கவீறு

சித்திசெய்தும், ஞானம் அலது கதி கூடுமோ
    சித்தாந்த முத்தி முதலே
 சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே
    சின்மயானந்த குருவே!
=======================================================================
அரும் பத உரை
‍‍‍‍===============

பரவை=கடல்;  எழுநா=தீ,நெருப்பு,அக்னி;புனல்=நீர்,தண்ணீர்;  


மலைநுழைவு=மலைக் குகை; புக்கி=புகுதல்,நுழைதல்;

நாடி முற்றும் சுத்தி செய்தும்= நாடிசுத்திப் பிராணாயா ம‌ம் செய்தும்

மூலப் பிராணனோடு அங்கியைச் சோம வட்டத்து அடைத்தும்=தியானத்தின் உச்ச‌ நிலை;சமாதிநிலை என்வும் கொள்ளத் தகும்

அற்ப உடல் கற்பங்கள் தோறும்நிலை நிற்கவீறு சித்திசெய்தும்= காயகற்பம் அதாவது உடல் நீண்டநாள் வாழும் வண்ணம் யோகம் பயிலுதல்;
=======================================================================

ஸ்ரீதாயுமானவ சுவாமிகளின் பாடல் இது.அரும்பத உரையை வைத்துக்கொண்டு நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.

சொற்களைப் பிரித்து கமா போட்டு எழுதியுள்ளேன். அப்படிச் செய்வது இலக்கணப் பிழை.பண்டிதர்கள் மன்னிப்பார்களாக.

ஆன்மீகப் பயிற்சிகளின் நிலைகள் வரிசைப் படுத்தப் பட்டுள்ளன.

இதில் நாம் எங்கே இருக்கிறோம் என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ளலாம்.

நான் இன்னும் முதல் படியான பக்திநெறியிலேயே இருக்கிறேன்.

2 comments:

  1. இன்னும் கொஞ்சம் புரியும்படியாக விளக்கவுரையோடு தரலாமே ?

    எல்லோரும் ஒருபக்கத்துக்குள் இருக்க வேண்டும் என்பதற்காக இப்படி தருகிறீர்களா ?

    ( பின்னே உங்க மாதிரி 30 பக்க நோட்டெல்லாம் போட்டா யார் படிப்பாங்க ? ன்னு கேட்கிறது இங்கே காதுலே விழுது மாமி )

    நன்றி .. நல்ல படைப்பு...

    ReplyDelete
  2. உங்கள் மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்தால் கட்டுரை ஏதேனும் அனுப்ப வசதியாக இருக்குமே. கடந்த இரண்டு நாட்களாக தாயும் ஆனவருக்குப் பிறகு ஒன்றையும் காணோமே.

    ReplyDelete