Thursday 5 May 2011

ஒசாமா டு ஒபாமா





ஒபாமா பதவியேற்ற புதிதில் அவருடைய பூர்வோத்திரம் ஊடகங்களில் அலசப்பட்டது.அவருடைய தந்தையார் முஸ்லிம் என்றும் அதனால் அவருக்கு முஸ்லிம் சார்பு நிலை உண்டு என்றும் பேசப்பட்டது.

அதற்கேற்றார் போல ஒபாமாவும் இஸ்லாம் சார்பு நிலை அறிக்கைகளை வெளியிட்டார். அமெரிக்க மண்ணில் போரையே சமீபத்தில் கண்டிராத அமெரிக்கர்களுக்கு இரட்டைக் கோபுரத் தகர்ப்பும் அதில் மாண்ட 3000 அமெரிக்கர்களையும் மறக்க முடியவில்லை.அந்தக் கோர சம்பவத்தில் மடிந்தவர்களுக்கு ஆன்ம சாந்தியாகப் பழிக்கு பழி வாங்க வேண்டும் என்பது மக்களின் ஏகோபித்த முடிவாக இருந்தது.

சரியும் பொருளாதாரம், வந்ததிலிருந்து சொல்லிக்கொள்ளும் படியாக எந்தத் திட்டமும் தராதது, இதையெல்லாம் எண்ணிப் பார்த்து தன் சரியும் 'இமேஜை' காப்பாற்றிக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஒபாமாவுக்கு ஏற்பட்டுவிட்டது.

ஒபாமாவின் ஆலோசகர்கள் தீவிரவாதத்தை ஒழிக்கும் பணியில் தீவிரமாக ஈடுப‌ட்டால் உடனடிப் பயன் உண்டு என்று அறிவுறுத்தியிருக்கலாம்.பார்த்தார் ஒபாமா!  சி ஐ ஏ வுக்கு ஆணையிட்டார்."ஒசாமாவை உயிருடனோ, பிணமாகவோ பிடித்து வருவதைத் தலையாய பணியாகச் செய்ய வேண்டும்.இதற்குத்தான் முன்னுரிமை. (மற்றபடி உலகின் மற்ற பாகங்களில் நம் ஆயுதங்களை விலை போகச் செய்ய, போர் நடவடிக்கைகளை ஊக்குவிப்பதை கொஞ்சநாள் நிறுத்தி வைக்க வேண்டும்")

உடனே வேலையில் இறங்கியது சிஐஏ. 10 ஆண்டுகளாக ஒசாமா தங்கியிருந்த இடம் தெரியாதவர்களுக்கு, அபோட்டொபாத இப்போதுதான் தெரிய வந்ததாம்.
நம் ஊரில் நடக்கும் ஒரு சிறிய‌ ஆர்ப்பாட்டம் கூட முழுமையாக விடியோ எடுக்கப்பட்டு அமெரிக்க உளவுத்துறை ஆவணமாகி விடுவதாகக் கூறப்படுகிறது.அப்படியிருக்கும் போது ஒசாமாவின் இருப்பிடம் 10 வருடமாக அமெரிக்காவுக்குத் தெரியாது என்பது சும்மா கண்கட்டு வேலை.
இதுவரை நடவடிக்கை எடுக்காததற்கு ஜிஹாதிகளின் எதிர்வினையைப் பற்றிய பயம் கூடக் காரணமாக இருக்கலாம்.


என்ன காரணத்துக்காக இந்த நடவடிக்கை இவ்வளவு காலம் கிடப்பில் போடப்பட்டது என்பது யாருக்கும் தெரியாத நிலையிலும், அமெரிக்க அதிரடி வீரர்களின் சாகசம் பாராட்டுககுரியது.

ஜிஹாதிகளை சாதாரணமாக எடைபோடமுடியாது.ஒசாமா மறைவு ஒரு முடிவல்ல. தொடர்ந்த 'ஜிஹாதித்துவா'வுக்கு ஒரு முக்கியமான திருப்பம்.
எதற்கும் ஒபாமா தன் பதுகாப்பைப் பலப்படுத்துவ‌து நல்லது.

தேன்கூட்டில் கை வைத்துவிட்டார் ஒபாமா. கொட்டும் என்பதும் தெரிந்திருக்க வேண்டும்.
-------------------------------------------------------------------------------------------------------------
IMPORTANT NEWS:   BEWARE OF AN ANOUNCEMENT IN FACE BOOK, TWITTER etc., INVITING YOU TO CLICK TO WITNESS THE SHOOT OUT VIDEO OF OSAMA. THAT IS A VIRUS ATTACK CATCH. For further details see this link.

http://winmani.wordpress.com/2011/05/03/osama-binladen-killed-video/

3 comments:

  1. //ஜிஹாதிகளை சாதாரணமாக எடைபோடமுடியாது.ஒசாமா மறைவு ஒரு முடிவல்ல. தொடர்ந்த 'ஜிஹாதித்துவா'வுக்கு ஒரு முக்கியமான திருப்பம்.//

    இப்படியெல்லாம் பீதியை கிளப்பாதீகப்பா ..


    //தேன்கூட்டில் கை வைத்துவிட்டார் ஒபாமா.கொட்டும் என்பதும் தெரிந்திருக்க வேண்டும். //

    தீமையை அழிப்பவர்களை இறைவன் காக்கட்டும்.

    ReplyDelete
  2. ஒசாமாவை ஒழித்த ஒபாமாவுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறீர்கள். சரிதான். இதே ஒசாமாவை ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்திருந்த ரஷ்யர்களை விரட்ட அமெரிக்கா பயன்படுத்தியது, மறந்துவிடவில்லை. அன்று ஆதரித்த ஒசாமா இன்று எதிரியானார். பஞ்சாபில் அகாலிகளை அடக்க பிந்தரன்வாலாவை வளர்த்து விட்டார் இந்திரா காந்தி. பின்னர் அதே பிந்தரன்வாலே அவருக்கு எதிரியானார். தேவை ஏற்படும்போது தீய சக்திகளை வளரவிடுவதும், பின்னர் அதே தீய சக்தி தனக்கு எதிராக வந்துவிடுவதும் வரலாற்றில் பதிந்துவிட்ட நிகழ்ச்சிகள். ஒரு உறுதி கொள்ள வேண்டும். எந்த காரணம் கொண்டும் எதிரியை வீழ்த்த தீய சக்திகளின் உதவியை நாடக்கூடாது என்பதுதான் அது. யார் கேட்கப் போகிறார்கள். ஊதுகிற சங்கை ஊதி வைப்போம்.

    ReplyDelete
  3. பின்னூட்டங்களுக்கு நன்றி, எடப்பாடியாருக்கும்,தஞ்சாவூராருக்கும்!

    ReplyDelete