Saturday 14 May 2011

முதலையிடமிருந்து தப்பிய விவேகானந்தர்!!



நம் நாட்டிற்கு வந்த ஐரோப்பியர்கள் இங்குள்ள சமூக அமைப்புக் காரணமாகவே இந்த மக்க‌ள் எந்தத் துன்பத்தையும் தாங்கிக் கொள்கின்றனர்.அதனால் சமூகம் கட்டுக் கோப்பை இழக்காமல் உள்ளது. இவர்களைப் பிரிக்க ஒரே வழி இவர்களுடைய சமூக வழிமுறைகளையும், பழக்க வழக்கஙளையும் இழிவாகப் பேசி இந்த மக்களையே தங்களுடைய பல்லாண்டுகளாகப் புழக்கத்தில் இருக்கும் எல்லா செயல்பாடுகளின் மீதும் அவநம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு பிராச்சாரத்தைச் செய்தார்கள்.

"இந்திய மக்கள் அனைவருமே பாம்பு வழிபாட்டுக்காரர்கள்;30000 உருவங்களை வைத்து வழிபாடு செய்பவர்கள்;பிறந்த குழந்தைகளை கங்கையில் முதலைக்குப் போட்டு விடுவார்கள்; அல்லது ஜகன்னாதர் கோவில் ரத யாத்திரையில் குழந்தைகளை தேர்ச் சக்கரத்தில் பலி கொடுப்பார்கள்....." இப்படிப் பொய்யும்,மிகைப் படுத்தலுமான பிரசாரத்தை செய்தார்கள்.

பல வெளி நாடுகளிலும் இந்தப் பிரசாரம் செய்யப்ப‌ட்டு உலக நாடுகளில் உள்ள மக்கள் அனைவரும் இந்தியா பாம்புப் பிடாரர்களையும்,
காட்டுமிராண்டிகளையும் கொண்ட நாடு; இந்தியர்களை நாகரீகப்படுத்தும் அரும் பணியை ஐரோப்பியர்களும்,கிறிஸ்துவ மிஷனரிகளும் செய்து வருகிறார்கள் என்று நம்பும்படிக்கு அவர்களுடைய பிரச்சாரம் இருந்தது.


இப்படிப்பட்ட சூழலில்தான் சுவாமி விவேகானந்தர் அமெரிக்கா சென்றார்.
உலக மதப் பேரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டதால் அவருடைய புகழ் எங்கும் பரவியது.

அமெரிக்காவில் அவர் சென்ற இடத்தில் எல்லாம் அவ‌ரிடம் சாதாரண மக்கள்,
"உங்கள் நாட்டில் குழந்தைகளை முதலைக்குப் போட்டு விடுவீர்களாமே.."
என்று கேட்பார்களாம்.

சுவாமி விவேகானந்தர், புன்முறுவலுடன் சொல்வாராம்," ஆம்! என் தாயார் கூட என்னை முதலையிடம் போட்டு விட்டார்கள்! ஆனால் பாருங்கள் என் உடல் மிகப் பருமனாக இருந்ததால் முதலையால் விழுங்க முடியவில்லையாம். அதனால்தான் நான் உயிர் பிழைத்து உங்கள் முன்னால் நிற்கிறேன்"

இதைக் கேட்டுவிட்டு மக்கள் நகைத்து விட்டு தெளிவடைவார்களாம்.
   

3 comments:

  1. நமது இந்து மதமும் சைவ சமயமும் சந்திக்காக பொய்ப் பிரச்சாரங்களே இல்லை.. அதில் இதுவும் ஒன்று ...

    என்ன நம்மில் சில புல்லுருவிகள் காசுக்காக சமயத்தை விற்கும் போது வேதனைதான் மிஞ்சுகிறது..

    நம்மிடையே விழிப்புணர்வு வரவேண்டும் ..அதற்கு ஆன்மீக சிந்தனைகள் நாடெங்கும் பரவ வேண்டும்..
    அதற்கு இறைவன் மனம் வைக்க வேண்டும்.

    தங்களது சிந்தையோடு கை கோர்க்கிறேன் மாமி..
    நன்றி..

    ReplyDelete
  2. அத்தனை மக்களையும் இரு சொற்களால் கட்டிப் போட்ட விவேகானந்தரிடமே இப்படிப்பட்ட கேள்வியா?

    இப்படித் தான் ஒரு நண்பர் என்னிடம் கேட்டார்.மான் வயிற்றிலிருந்து குழந்தை வருகிறது என்கிறீர்களே இது நியாயமா?எப்படி வரும் என்றார்.அவர் கிறிஸ்தவர்.ஆணின் முதுகெலும்பில் இருந்து பெண் வரும்போது மான் வயிற்றில் குழந்தை வராதா என்றேன்.

    அன்றிலிருந்து நம் சமய விசயங்களைப் பற்றி அவர்(என்னிடம்) பேசுவதே இல்லை.

    ReplyDelete
  3. எனது அனுபவம் வேறுமாதிரியானது...
    எனது நண்பர் ஒருவர் அவரின் பெயர் மைக்கேல்
    அவர் என்னிடம் பேசும் பொது பகவான் அருள வேண்டும் என்பார்
    நான் அவரிடம் பேசும் போது ஜோசுவா / ஜீசஸ் கருணை புரியட்டும் என்பேன்
    மாற்றுக் கருத்து சொல்ல வேண்டும் என்பதற்காக கூறவில்லை...
    ஒரு முறை சும்மா பேசிக் கொண்டிருக்கும் போது ஜீசஸ் இமயமலைச் சாரலுக்கு
    வந்து பாபாஜியைப் பார்த்து வந்ததாக கூறும் போது ஆமாம் தேவாலயத்தில் கூட
    அவர் இமயமலைக்கு வந்து சென்றதாக பேசினார்கள்... தேவ தூதர்கள் சந்தித்து இருக்கலாம் என்றார்..
    நான் பெரும்பாலும் அவரிடம் பேசும் போது எனக்குத் தெரிந்த பைபிள் வரிகளை உதாரணம் காட்டியும் அதற்கு சமமான நமது மத நீதிகளை அவசியப்பட்டால் தொடர்பு படுத்தியும் பேசுவதுண்டு... நாம் பெரும்பாலும் அவர்கள் மதத்தில் உள்ள நல்ல விசயங்களை அமோதித்து அவர்களிடம் நாமே பெருமையாக பேசினால் நம்மை அவர்கள் புரிந்து கொள்ள நேரிடும்... இன்னொருவர் எங்கள் ஊரைச் சேர்ந்த இளைஞர் (நான் சிறுவயதில் பார்த்ததே இல்லை) இங்குத் தேடி வந்து என்னிடம் தனது ஜாதகத்தைக் குறித்து தந்து அதில் நேரம் எப்படி இருக்கிறது வியாபாரம் செய்யலாமா என்றும் (சென்ற மாதம்) கேட்டார்... அந்த இளைஞரை சில நேரங்களில் முருகன் கோவிலில் பார்த்து இருக்கிறேன்.. அப்போது கூட எனக்கு காரணம் புரியாது???!!! காரணம் அவர் ஒரு இஸ்லாமிய இளைஞர்....

    வேண்டுமென்று பேசுபவர்களிடம் சிரிப்பை பதிலாக்கினால் போதும்... தெரியாமல் / புரியாமல் பேசினால் விவேகானந்தர் பாணி நல்லது....
    நன்றி...

    ReplyDelete