Thursday 19 May 2011

மனிதனின் உணவு எது?சைவமா அசைவமா?



இந்தக் கேள்வி நீண்ட விவாதத்தைத் தோற்றுவித்துள்ளது. வலைதளங்கள் பலவற்றிலும் இந்த விவாதம் நடந்து வருகின்றது. எந்த ஒரு முடிவும் எட்டப்படாத ஒரு தலைப்பு இது.

மனிதன் அசைவம் ,சைவம் இரண்டையுமே சாப்பிடும்படிக்கு உடல் நிலை அமைப்புப் பெற்றுள்ளான்.எனவே எது வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்பது ஒரு சரியான வாதமே.

மாடு, ஆடு, மான்,குதிரை யானை, ஏன் நீர்யானை, காண்டாமிருகம் எல்லாமும் சைவத்தையே உண்கின்றன. அசைவம் சாப்பிடும் சிங்கம் புலி, போன்றவை உணவுக்காக அசைவ உணவு சாப்பிடும் மிருகஙளைக் கொல்வதில்லை. தன்னுடைய வாழ்விடங்களுக்கான சண்டையிட்டு
மற்ற தன் இன மிருகங்களைக் கொல்லுமே தவிர, உணவுக்காக ஒரு அசைவப் பிராணி மற்றொரு அசைவப் பிராணியைக் கொல்லுவதில்லை.

மிருக இனத்தில் அதன் அதனுடைய இயற்கையான உணவு எது என்பதை
கடவுள் அல்லது இயற்கையே அவற்றுக்கு அறிவுறுத்தி உள்ளது.
மாடு தன் உணவு புல் என்பதையும்,ஆடு தன் உணவு இலை தழை என்பதையும்,யானை கரும்பு, மூங்கில்,தென்னைமட்டை என்பதையும் நனகு அறிந்துள்ளன‌. அதுபோலவே சிங்கம்,புலி தஙளுடைய உணவு மான், ஆடு மாடு என்பதை நன்கு அறிந்துள்ளன.

அதுபோல மனிதன் தன் உணவு இயற்கையாக இதுதான் என்பதை அறிந்துள்ளானா?எதை வேண்டுமானாலும் மனிதக்குடல் ஏற்றுக்கொள்கிறது
என்பதால் எதை வேண்டுமானாலும் சாப்பிடலாமா?

எல்லோருமே சைவமாக மாறிவிட்டால் சைவ உணவுக்குத் தட்டுப்பாடு வந்துவிடும்.மிருகங்க‌ள் கொல்லப்படாவிட்டால் அவற்றின் எண்ணிக்கை அதிகமாகிவிடும்.தோலுக்காகக் கொல்லப்படும் மிருகங்கள்,தோலை எடுத்தபின்னரே உணவாகப் பயன் படுகிறது.இவையெல்லாம் அசைவக்காரர்ர்கள் முன்னிறுத்தும் சில வாதங்கள்.இவை யாவற்றுக்கும் தக்க பதில் நம்மிடம் உண்டு.

நம் கேள்வி ஒன்றே ஒன்றுதான்.மனிதனின் இயற்கை உணவு எது?

ஏனைய மிருகங்கள் உண‌வை சமைத்து உண்பதில்லை.அதுபோலவே எதையெல்லாம் மனிதனும் சமைக்காமல் உண்ண முடியுமோ அவைதான் மனிதனுடைய இயற்கை உணவு. எல்லாப் பழங்களையும் மனிதன் சமைக்காமல் சாப்பிடலாம். இயற்கையே நமக்காகப் பழங்களை சூரிய ஒளியில் சமைத்துக் கொடுத்து விட்டது.அதுபோலவே பல காய்களையும் நாம் சமைக்காமல் அப்படியே சாப்பிடலாம்.தேங்காய் சமைக்காமல் உண்ணலாம்.
எனவே எதை நாம் சமைக்காமல் சாப்பிட முடியுமோ அதுதான் நமது இயற்கை உணவு.

இந்த வாதத்தின் படி எந்த அசைவ உணவையும் சமைக்காமல் மசாலா சேர்க்காமல் உண்ண முடியாது.எனவே அசைவம் மனிதனின் இயற்கைக்கு எதிரானது. சைவமே மனிதனின் இயற்கையான உணவு என்பதே உண்மை.



9 comments:

  1. ////மனிதன் அசைவம் ,சைவம் இரண்டையுமே சாப்பிடும்படிக்கு உடல் நிலை அமைப்புப் பெற்றுள்ளான்.எனவே எது வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்பது ஒரு சரியான வாதமே.//// சரியான வாதம்...... அல்ல வாதமே என்றுக் கொள்கிறேன்.

    வாதத்தில் சரி என்றால்... இந்த இடத்தில் நான் கருத்து மாறுபடுகிறேன்.... சைவம் உணவாகக் கொண்ட மற்ற மிருகங்களும் மனிதனும் தான் உடல் ரீதியில் ஒன்றாகப் படைக்கப் பட்டுள்ளது......
    மனிதர்களின் பற்களும்... சைவத்தையே உண்ணும் மிருகங்களின் பற்களுமே உதாரணமாக சொல்லலாம்...

    ///இந்த வாதத்தின் படி எந்த அசைவ உணவையும் சமைக்காமல் மசாலா சேர்க்காமல் உண்ண முடியாது.எனவே அசைவம் மனிதனின் இயற்கைக்கு எதிரானது. சைவமே மனிதனின் இயற்கையான உணவு என்பதே உண்மை.////

    உங்களின் கருத்தை விரித்துரைக்கிறேன்...

    அசைவத்தை மனித குடலில் செரிக்கச் செய்ய பட்டைக் கிராம்பு, பூண்டு இஞ்சி; சாப்பிட்டப் பிறகு வெத்திலைப் பாக்கு .... போன்ற பொருள்களும் தான் பெரும்பாலும் உதவும் என நம்புகிறேன். (மேலை நாடுகளில் சீமைச் சாராயமும் சேர்த்து உழைக்கிறது: பக்க விளைவு என்பது வேறுவிசயம்)

    அசைவத்தை வேளைதோறும் உண்பவர்கள் (இங்கே) குடல் புற்று நோயால் அதிகம் பாதிக்கப் படுவதைக் காண்கிறேன்... அசைவம் தவிர்க்கப் படவேண்டிய ஒன்றே....
    சூழல், ஊரோடு ஒத்துப் போதல் என்று பல சாக்குகள் சொன்னாலும்... மனித உடல்வாகு சைவத்திற்கே படைக்கப் பட்டது என்பது அடியேனின் கருத்து.....

    நல்ல பதிவு! நன்றி!!

    ReplyDelete
    Replies
    1. Comparative Anatomy & Taxonomy இது தங்கள் கருத்தை வழிமொழிகிறது

      Delete
  2. இதிலென்ன சந்தேகம் ..?

    மனிதனின் உணவு சைவம் தான்...

    ஆலாசியம் கூறியுள்ளதையே அடியேன் வழிமொழிகிறேன்..

    நன்றி

    ReplyDelete
  3. திருவள்ளுவரைப் போற்றுகிறோம். கடவுளையும், ஆத்திகத்தையும் கேலி செய்யும் நபர்கள் கூட திருவள்ளுவரை 'ஐயன்' என்று கடவுளுக்குரிய இடத்தில் வைத்துப் போற்றுகிறார்கள். மாபெரும் சிலையை கடலுக்குள் அமைத்து பெருமைப் படுகிறார்கள். அட்லீஸ்ட் அந்த திருவள்ளுவர் சொன்னதையாவது இவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமா இல்லையா? திருவள்ளுவர் தனது திருக்குறளில் "புலால் உண்ணாமை" என்று ஒரு அதிகாரம் பாடியிருக்கிறார். ஏற்றுக் கொள்ள வேண்டியதுதானே! ஞாயிற்றுக் கிழமைகளில் நடைப்பயிற்சி செல்ல தயக்கமாக இருக்கிறது. வழி நெடுக நூறடிக்கொரு மாமிச வியாபாரி தெருவோரம் கடைவிரித்து, மக்கள் பார்வையில் படும்படி ஆடுகளை வெட்டி வியாபாரம் செய்கிறார்கலள். என்ன கொடுமை இது? ஒரு ஆங்கிலப் படம் பார்த்தேன். மனிதன் மிருகங்களை வைத்து வேடிக்கைக் காட்டி பிழைப்பு நடத்துவது போல, குரங்குகள் மனிதனைப் பிடித்து வைத்துக் கொண்டு வேடிக்கை காட்டுவது போல. அப்படியொரு நிலை வந்தால் ஆட்டை வெட்டுபவர்கள் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று ஓடிவிடுவார்களா மாட்டார்களா? உணவுப் பழக்கம் அவரவர்க்கு ஏற்பட்ட உரிமை. அதில் தலையிட முடியாது. ஆனால் உயிர்வதையை மறைவாகச் செய்யலாமே. அப்படிச் செய்பவர்கள் திருவள்ளுவரை எதற்கெடுத்தாலும் சொல்லி அறுக்க வேண்டாமே.

    ReplyDelete
    Replies
    1. http://suvanappiriyan.blogspot.in/2011/02/blog-post_15.html
      தலைப்பு வேறு அனால் கூற வந்த கருத்து கண்டு பகிர்கிறேன் :
      எந்த ஒரு கொள்கையும் உலக மக்கள் அனைவரும் கடைபிடிக்கக் கூடிய ஒன்றாக இருக்க வேண்டும். புலால் உண்ணாமை என்பது ஏதோ மிகப் பெரிய அறம் போன்று செய்தி பரப்பப்படுகிறது. துருவப்பிரதேசங்களில் வாழக் கூடியவர்கள் கய்கறிகளை மட்டுமே சாப்பிட வேண்டும் என்றால் அவர்களால் உயிர் வாழ முடியாது.

      அடுத்து மனிதர்கள் உணவாக சாப்பிடும் ஆடு,மாடு,கோழி,ஒட்டகம்,மீன் போன்ற உயிரினங்கள் உலக அளவில் எண்ணிக்கையில் குறையக் காணோம். அதிகமாகிக் கொண்டுதான் இருக்கிறது. இவை எல்லாம் புலால் உண்ணுபவர்களால் உபயோகப்படுத்தாமல் விட்டால் இவைகளின் எண்ணிக்கை அதிகரித்து சுற்று சூழலுக்கு பிரச்னையாகி விடும். முடிவில் ஆஸ்திரேலியாவில் கங்காருகளின் எண்ணிக்கை அதிகரித்து அவைகளை சுட்டுக் கொல்ல் அரசு ஆணையிட்டது போல்தான் எங்கும் நடக்கும். பாதிபேர் புலால் உண்ணுவதால்தான் காய்கற்களின் விலை ஒரு மட்டுக்குள் இருக்கிறது.

      அனைவரும் சைவத்துக்கு மாறி விட்டால் உணவுத் தட்டுப்பாடும் ஏற்படும்.

      விலங்குகளின் உடம்பிலிருந்து பெறப்படும் பால் சைவம்தான் என்பதற்க்கு அறிவியல்பூர்வமாக எந்த ஆராய்ச்சியையும் தினமலர் வெளியிடவில்லை.

      எனவே காய்கறிகளை விரும்பி சாப்பிடுபவர்கள் தாராளமாக சாப்பிட்டுக் கொள்ளட்டும். புலால் உணவை விரும்புபவர்கள் மாமிசம் சாப்பிட்டுக் கொள்ளட்டும்.

      Delete
  4. ஆலாசியம் ஐயாவின் கருத்தை ஆமோதிக்கிறேன்.

    மனிதன் உண்ணும் உணவுக்கும் அவன் உணர்வுக்கும் சம்பந்தம் உண்டு எனக் கூறுவார்கள்.எனவே சாத்வீகமான சைவ உணவே சிறந்தது.

    ReplyDelete
  5. http://www.stevepavlina.com/blog/2005/09/are-humans-carnivores-or-herbivores-2/
    http://www.transformationinstitute.org/Assets/John_Coleman_Comparative_Anatomy_&_Taxonomy.pdf
    இது உங்கள் கருத்தை வலு சேர்க்க உதவலாம்

    ReplyDelete
  6. பட்டபோட்டவனும் கொட்டபோட்டவனும் சைவத்தையே தின்னுங்க. மனிதன் நரமாமிசன் உண்டவன் என்பதை மறக்க வேண்டாம். அடுத்ததாக பல் அமைப்பை பேசும் நீங்கள் மூளை அமைப்பு பற்றியும் பேச வேண்டும். மனிதனுக்கு அதிகமான அறிவு உள்ளது அவனால் ஒன்றை சமைக்க முடியும். இதுவும் இயற்கை வகுத்தது தான். மற்ற உயிரினங்களுக்கு இது தெரியாது

    ReplyDelete
  7. அரிசி கோதுமை போன்றவைகளை சமைக்காமல் உன்ன முடியுமா?

    ReplyDelete